திருப்பூர் 15 வேலம்பாளையம் ரேஷன் கடையில் பருப்பு கடத்தல் விற்பனையாளர் பணி நீக்கம் !
திருப்பூர் 15 வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கார்டு இல்லாமல் இருபது கிலோ பருப்பை ஒரு சாக்கு பையில் ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதை பார்க்க பொதுமக்கள் இதுபற்றி கேள்வி கேட்ட போது முன்னுக்கு முரணாக பதில் சொன்னதால் பணியில் இருந்த பெண் விற்பனையாளரிடம் பொதுமக்கள் கேட்ட பொழுது அவரும் முன்னுக்கு முரணாக பதில் சொன்னதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இந்த நிகழ்ச்சி முழுவதும் கைபேசியில் வீடியோவாக எடுத்துள்ளார்கள் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது இந்த நிலையில் ரேஷன் கடையில் விற்பனையாளரான ராமாத்தாள் (வயது 36) என்பவரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு செயல் அதிகாரி செல்வி உத்தரவிட்டுள்ளார் இது பற்றி பொதுமக்கள் கூறுகையில் ரேஷன் கடை பொருட்கள் வாங்க செல்லும் பொழுது எப்பொழுதும் பருப்பு பாதி பேருக்கு தான் கிடைக்கிறது என்றும் அதன் காரணம் தற்போது தான் தெரிய வருகிறது என்றும் கடத்தல் செய்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment