பாரதிய ஜனதா மகளிர் அணி செயற்குழு திருப்பூரில் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜெகதீஸ்வரி இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் சிறப்பு விருந்தினராக மகளிர் அணி மாநில துணைத்தலைவர் வித்யா ரமேஷ் பங்கேற்று பேசினார். கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன் மாநில செயலாளர் சுதாமணி சதாசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி பத்மநாபன், மாவட்ட பொதுச் செயலாளர் சங்கீதா ஆனந்தி, பொருளாளர் கீதா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருப்பூர், பல்லடம் பகுதிகளில் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் ஒரு சில இடங்களில் மருத்துவமனை அருகே உள்ள மதுக்கடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் அதை அப்புறப்படுத்த வேண்டும் . பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளது அதை தடுக்க வேண்டும். பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு தங்கும் விடுதி வசதியை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவிகள் கழிப்பிடங்களை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment