திருப்பூர் கொழுமத்தில் சமுதாய நலக்கூடம் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் பலி ! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 October 2023

திருப்பூர் கொழுமத்தில் சமுதாய நலக்கூடம் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் பலி !


திருப்பூர் கொழுமத்தில் சமுதாய நலக்கூடம் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் பலி ! 



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொழுமம் பகுதியில் பேருந்துக்காக சமுதாய நலக்கூடத்தின் மேற்கூறையின் கீழ் அந்த பகுதியைச் சேர்ந்த கௌதம்(29) முரளி(25) மணிகண்டன்(28) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென சமுதாய கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது இதை சற்றும் எதிர்பாராத கௌதம், முரளி, மணிகண்டன் ஆகியோர் தப்பிக்க முடியாமல் மேற்கூறையின் இடுப்பாடிக்குள் சிக்கிக் கொண்டனர். இதனால் பலத்த காயமடைந்த  அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மீட்டு உடுமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மூவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து குமரலிங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இறந்த மூவரின் உடல்களை உடுமலை அரசு மருத்துவமனையில் உடல் ‌கூராய்வு செய்வதற்கு வைக்கப்பட்டுள்ளது. கொழுமம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad