நமக்கு நாமே திட்டத்தில் திருப்பூர் 3 வது வார்டு கவுன்சிலர், பொது மக்கள் மேயரிடம் நிதி வழங்கினர்.
திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டலம் 3 வது வார்டு க்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் உள்ள அம்மன் நகர் 3-வது வீதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு, பொதுமக்களின் பங்களிப்புத் தொகையாக ரூ.5,40,000/-ற்கான வங்கி வரைவோலையை, மாண்புமிகு திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் அவர்களிடம் 3-வது வார்டு மாமன்ற உறுப்பினர் லோகநாயகி கருப்பசாமி அவர்களும் அப்பகுதி மக்களும் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் இவர்களுக்கு மாண்புமிகு மேயர் ந.தினேஸ்குமார் திருப்பூர் மாநகர மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளையும். தெரிவித்தும் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment