திருப்பூரில் மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்தில் சமூக ஆர்வலர், திமுக பிரமுகர் பள்ளி குழந்தைகளுடன் அஞ்சலி செலுத்தினார்.
திருப்பூர் அவிநாசி ரோடு காந்திநகர் சர்வோதய சங்க வளாகத்தில் மகாத்மா காந்தி அவர்களின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் திருப்பூர் மாநகர 14 வது வட்டக் கழக செயலாளர் சமூக ஆர்வலருமான மு.ரத்தினசாமி அவர்கள் காந்தியடிகளின் தியாகத்தை வருங்கால சந்ததிகளான குழந்தைகளுக்கு தெரியப்படுத்தவும் அவர் பள்ளி குழந்தைகளை மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்திற்கு அழைத்துச் சென்று மலர் தூவி மரியாதை செய்தார் . இந்த காந்திநகர் அஸ்தி
மண்டபத்திற்கு போற்றுதலுக்குரிய வரலாற்று பின்னணி உள்ளது. திருப்பூரில் மற்ற இடங்களில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் பொழுது அவரது திருவுருவ சிலைக்கும் திருவுருவப்படத்திற்கும் ஆங்காங்கே மரியாதை செலுத்துவார்கள் ஆனால் அவருடைய அஸ்தி காந்தி நகரில் சர்வோதய சங்க வளாகத்தில் உள்ளது பெரும்பான்மை மக்களுக்கு தெரியவில்லை மிகவும் வருத்தப்படக்கூடிய ஒரு செய்தியாகும் இந்த மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்தின் முன்புறம் நுழைவாயிலில் அஸ்தி மண்டப பெயர் பலகை வைக்க வேண்டும் இங்கு மகாத்மா காந்தியின் அஸ்தி உள்ளதை பிரபலப்படுத்த வேண்டும் வருங்கால இளம் தலைமுறை பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மக்களுக்கும் தெரிவித்து வருங்காலங்களில் இந்த மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்திற்கு வந்து மலர் மரியாதை செய்யும் நிகழ்வுகளை பெருமளவில் நடத்த வேண்டும் என்று கூறினார்.
No comments:
Post a Comment