சகலையை கொலை செய்தவர் மடத்துக்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 October 2023

சகலையை கொலை செய்தவர் மடத்துக்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்


சகலையை கொலை செய்தவர் மடத்துக்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நீதிமன்றத்தில் கொலையாளி ஒருவர்
இன்று சரண் அடைந்தார்.



விசாரனையில், ஆனைமலையை அடுத்த தாத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் உன்னிகிருஷ்ணன் இவரது மனைவி கவிதா இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில்
உன்னிகிருஷ்ணனின் மனைவி கவிதாவின் உடன்பிறந்த தங்கையான அதே பகுதியில் வசிக்கும் சத்யாவின் கணவர் சசிகுமாரும், உன்னிகிருஷ்ணனும்  நேற்று மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் தகராறு முற்றிப்போய் உன்னிகிருஷ்ணன் தலையில் கல்லை போட்டு கொடூரமாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த உன்னிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கொலை செய்த சசிகுமார் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.



இதையடுத்து சம்பவம் அறிந்து வந்த ஆனைமலை காவல் நிலைய போலீசார் உன்னிகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இதனிடையே தலைமறைவான சசிகுமாரை ஆனைமலை காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், மடத்துக்குளம் கோர்ட்டில் சசிகுமார் சரணடைந்துள்ளார். விசாரணையைத் தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பெயரில் சசிகுமார் சிறையில் அடைக்கப்பட்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad