திருப்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது !
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினை திறந்துவிட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளை பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசின் போக்கை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில்
மாநில நிர்வாகிகள் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பாசறை நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள். மற்றும் ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment