சாலையோரம் வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க ஏ ஐ டி யு சி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 October 2023

சாலையோரம் வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க ஏ ஐ டி யு சி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் !


சாலையோரம் வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க ஏ ஐ டி யு சி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் !



திருப்பூர் அவிநாசி ஏஐடியுசி சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்  அவிநாசி புதிய பஸ் நிலையம் முன்பாக
ஏழை எளிய  சிறு வியாபாரம் செய்து வாழ்வாதாரம் நடத்தும் சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் உடனடியாக காலி செய்ய சொல்லும் அவிநாசி பேருராட்சியின் நடவடிக்கையை உடனடியாக கைவிடக் கோரி ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 60 பெண்கள் உள்பட 120 பேர் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில்
அவிநாசி பேரூராட்சி நிர்வாகம்
சாலையோர வியாபாரிகளை வஞ்சிக்கிறது என்றும்,
தெருவோர வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும்,
தெருவோர வியாபாரிகள் அனைவரையும் முறையாக கணக்கெடுத்து
அவர்களுக்கான அடையாள அட்டையை உடனே வழங்க கோரியும்,
வணிகக்குழு தேர்தலை உடனடியாக நடத்திட கோரியும் , தெருவோர வியாபாரிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும்,
15 பேர் கொண்ட வணிகக்குழுவை உடனடியாக அமைத்திட  கோரியும்.
தேர்தல் நடத்தி வணிகக்குழு அமைக்கும் வரை தற்போது வியாபாரம் செய்யும்
இடத்திலிருந்து தெரு வியாபாரிகள் அப்பறப்படுத்தவோ, அச்சுருத்தவோ கூடாது என்றும் ,
தமிழ்நாடு அரசு தெரு வியாபார சட்டத்திற்கு எதிராக தலையிடும், அச்சுறுத்தும் உள்ளாட்சித்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்த கோரியும்  வலியுறுத்தி
AITUC
சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம்
A.M. கனகராஜ் AITUC ஜெனரல் சங்க ஒன்றிய தலைவர் தலைமை வகிக்க
M.மோகன்
ஏஐடியுசி மாவட்ட தலைவர்,
A.G.சண்முகம்
சிபிஐ ஒன்றிய செயலாளர்,
c.பழனிசாமி
மாவட்ட தலைவர்
ஏஐடியுசி ஜெனரல் ஒர்க்கர்ஸ் சங்கம்
திருப்பூர்,
N.செல்வராஜ் ஏஐடியுசி அவிநாசி ,  A.H.நாசர்அலி ஏஐடியுசி ஜெனரல், சங்க செயலாளர்,
வி.கோபால்
தலைவர்
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம்,
உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும்  வியாபாரிகள் கலந்து கொண்டனர். .


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad