ஸ்மார்ட் பஸ் நிலையத்தில் சாக்கடை நீரால் பரிதவிக்கும் பயணிகள் !
கண்டுகொள்ளாத சுகாதார அதிகாரிகள்! திருப்பூர் மாநகராட்சி கலைஞர் கருணாநிதி ஸ்மார்ட் பஸ் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தின் நுழைவாயில் முன்புறம் சாக்கடை கழிவு நீர் வெளியேறி பேருந்து நிலையம் உள்ளே வரை செல்கிறது இதனால் பயணிகள், வியாபாரிகள், இந்த சாக்கடை கழிவு நீர் மேலேயே நடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது . துர்நாற்றம் அடிக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த வாகன நிறுத்துமிடத்தின் நுழைவாயில் முன்புறம் உள்ள சாக்கடையை உடைத்து கழிவு நீரை வெளியேற செய்துள்ளனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அதை சீர்படுத்த வேண்டும். சாக்கடையை உடைத்து கழிவு நீரை வெளியேற்ற வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும். மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment