விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திருப்பூர் எம் எல் ஏ.!
நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, திருப்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் திருப்பூரில் இருந்து சென்னை செல்ல காரில் கோவை விமான நிலையம் சென்று கொண்டிருக்கும் வழியில்
கொச்சின்-சேலம் புறவழிச்சாலை அவிநாசி வடுகபாளையம் அருகே இளைஞர் ஒருவர் விபத்திற்குள்ளான தகவல் அறிந்து, உடனடியாக காயமைடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் விடுத்துள்ள அறிக்கையில் இளைஞர்கள் அனைவருக்கும் கேட்டுக்கொள்வது ஒன்றுதான், இளைஞர்கள் வாகனத்தில் பயணிக்கும் போது மிதமான வேகத்தில் பயணிக்க வேண்டும். சாலை வழி பயணம் மேற்கொள்ளும்போது
வழியெங்கும் கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்.
No comments:
Post a Comment