அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு பணிகளை செய்து வரும் தொழிலாளர்கள் நலன் காக்கவும் அவர்களுக்கு உண்டான உரிமைகளை, அரசு நலத்திட்ட உதவிகளையும் பெற்றுக் கொடுத்து வரும் அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நிறுவனத் தலைவர் ஜி கே விவசாயமணி (எ) சுப்பிரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆலோசனைகள் நடைபெற்றது. சங்க வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின்
குடும்ப நலன் , குடும்ப சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை தொழிலாளர்களுக்கு விவரித்தும் ஆலோசனைகளையும் தலைவர் ஜிகே. விவசாய மணி (எ) சுப்பிரமணி வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அகாஜாமைதீன்
No comments:
Post a Comment