மாநகராட்சி 8 வது வார்டில் தெரு விளக்கு , தார் சாலை அமைத்திட கோரிதுணை மேயரிடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மனு ! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 October 2023

மாநகராட்சி 8 வது வார்டில் தெரு விளக்கு , தார் சாலை அமைத்திட கோரிதுணை மேயரிடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மனு !

 


மாநகராட்சி 8 வது வார்டில் தெரு விளக்கு , தார் சாலை அமைத்திட கோரிதுணை மேயரிடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மனு !



திருப்பூர் மாநகர் ,  இரண்டாவது மண்டலம் ஏழாவது வார்டு கணபதி நகர் முதல் வீதியிலும், சக்தி நகர் முதல் வீதியிலும் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலை அமைக்காமல் வீதி முழுவதும் பாழடைந்து கிடந்த நிலையில் தற்போது பாதாள சாக்கடை பணிகளும், நான்காவது குடிநீர் திட்ட பணிகளும் செய்யப்பட்ட பின் மேலும் சீரழிந்துவிட்டது. மாநகரம் முழுவதும்  பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டு தார்சாலைகள் அமைக்கப்பட்டுவரும் நிலையில் இந்த வீதிகளிலும் புதிய தார்சாலை அமைத்து தெருவிளக்கு இல்லாத மின்கம்பங்களில் தெருவிளக்கு அமைத்துத்தர வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போயம்பாளையம் கிளை சார்பில் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 2 வது மண்டலக்குழு செயலாளர் வி.எஸ்.சசிகுமார், போயம்பாளையம் கிளை செயலாளர் என்.மகாலிங்கம், கிளை துணை செயலாளர் எ.மணிகண்டன், இளைஞர் பெருமன்ற 2 வது மண்டல பொருளாளர் பி.தேவராஜ் மற்றும் கணபதி நகர் முதல் வீதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவினை நேரில் வழங்கினர்.



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad