திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் ,
நான்காவது குடிநீர் திட்டப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மழைகாலத்திற்கு முன்பாக ஆற்றில் தடுப்பனை ஏற்படுத்தி உரிய நீரை திருப்பூருக்கு கொண்டு வருவதற்கான பணிகள் வேகமெடுத்து நடைபெற்று வருகின்றன.
அந்த பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் ,திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் இ.ஆ.ப , திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப , துணை மேயர் ஆர். பாலசுப்ரமணியம் ,மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவர் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன்,அணை கட்டும் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்து , பணிகளை வேகப்படுத்தி கால நிர்ணயம் செய்து, பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கினார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment