தனியார் நிறுவனங்கள் தோண்டிய சாலைகள் பேட்ச் ஒர்க் செய்யுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு ! திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் 14 வது வார்டு வீதி, மாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பல ரோடுகளில் தனியார் நிறுவனங்கள் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் மீட்டர் கட்டணம் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் தனியார் நிறுவனங்கள் செலவில் தோண்டப்பட்ட குழிகளை மூடி பேட்ச்ஒர்க் தார் சாலையில் தார் பேட்ச் ஒர்க், காங்கிரிட் சாலைகளில் கான்கிரீட் பேட்ச் ஒர்க் செய்ய வேண்டும். ஆனால் இந்த பேட்ச் ஒர்க் செய்யாத காரணத்தால் இந்த சாலைகளில் பொதுமக்கள் பயணிக்க முடிவதில்லை. இந்த வேலைகளை செய்தாலே சிறிது காலம் புதிய ரோடுகள் போடும் வரை பொதுமக்கள் பயன்படுத்த சிரமம் இல்லாமல் இருக்கும் ஆனால் தனியார் நிறுவனங்கள் பல ரோடுகளில் பேட்ச் ஒர்க் போடுவதில்லை ஜல்லிகளை பரவலாக பரப்பி விடுகிறார்கள் இது பற்றி கேட்டால் பேட்ச் ஒர்க் போடுவதாக சொல்கிறார்கள் ஆனால் புதிய ரோடு போடுவது போல் பரவலாக ஜல்லியை பரப்புவது எதற்காக? கடந்த ஆட்சி ஆட்சியில் சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் வேலை முடிந்ததும் பேட்ச் வொர்க் செய்து முடித்தார்கள். அதனால் அந்தப் பகுதி மக்கள் ரோடுகளை பயன்படுத்த சிரமம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை முறையாக பேட்ச் ஒர்க் செய்து முடிக்க வேண்டும் ஒப்பந்ததாரர்களுக்கு திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்த வேண்டும். மக்களின் பெரும் கோரிக்கையாக உள்ளது.
மாவட்ட செய்தியாளர்
காஜாமைதீன்
No comments:
Post a Comment