திருப்பூர் பகுதிகளில் சக்தி நர்சிங் ஹோம் நடத்தும் இலவச மருத்துவ முகாம் . - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 October 2023

திருப்பூர் பகுதிகளில் சக்தி நர்சிங் ஹோம் நடத்தும் இலவச மருத்துவ முகாம் .


திருப்பூர் பகுதிகளில் சக்தி நர்சிங் ஹோம்  நடத்தும் இலவச மருத்துவ முகாம் . 



திருப்பூர்  புதிய பேருந்து நிலையம்,காட்டன் மில் ரோடு அருகில் உள்ள சக்தி நர்சிங் ஹோம்,தோல் நோய் சிகிச்சை மையம் சார்பில் திருப்பூர் மாநகர பகுதிகளிலும் மற்றும் பெருமாநல்லூர்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்  ஏழை எளிய நடுத்தர மக்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். திருப்பூர் அங்கேரிபாளையம் அருகில் உள்ள கொங்கு வேளாளர் மேல் நிலை பள்ளி  முன்புறம் இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தொழிலாளர்கள்,: பொதுமக்கள் தங்கள் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து கொண்டனர். மேலும் சக்தி நர்சிங் ஹோம் மருத்துவமனையில் தோல் நோய் சிகிச்சை, முகப்பரு, கருவளையம், அலர்ஜி, சொரியாசிஸ், பால்வினை நோய்கள், தழும்பு அகற்றுதல் சிகிச்சை, பிஆர்பி சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விதமான தோல் சம்பந்தமான பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad