காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு டாஸ்மாக் கடையை மறைத்து லாரியை நிறுத்தி சிறப்பு (திருட்டு) விற்பனை !
மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினமான இன்று தமிழகம் எங்கும் டாஸ்மார்க் கடைகள் திறக்க கூடாது என்று அரசு உத்தரவிட்ட நிலையில் திருப்பூர் அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம் அடுத்த திலகர் நகர் பஸ் ஸ்டாப் எதிரில் உள்ள டாஸ்மார்க் கடை மற்றும் தண்ணீர் பந்தல் சிக்னல் அருகில் உள்ள டாஸ்மார்க் கடை முன்பாக லாரிகளை கடையை மறைத்து நிறுத்தி வைத்து கடையை திறந்து வைத்து படுஜோராக விற்பனை செய்கின்றனர். இது போன்ற முக்கியமான விடுமுறை விடும் பொழுது இந்த மதுபான கடைகளை சீல் வைத்து சாவிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விடுமுறை முடிந்ததும் திரும்ப பெற வேண்டும் என்று இருந்தால் மட்டுமே திருட்டுதனமாக கடையை திறந்து வைத்து மது விற்பது தடுக்கப்படும். விடுமுறை அன்று திருட்டு தனமாக மதுபான கடையை திறந்து வைக்க ஊழியர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் விற்பனை நடக்கிறதா? திருட்டு ஊழியர்கள் மீது டாஸ்மார்க் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
No comments:
Post a Comment