திருப்பூரில் மாநகராட்சி உதவி பொறியாளரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் !
திருப்பூர் வடக்கு பகுதியில் உள்ள திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகம் போயம் பாளையம் நஞ்சப்பா நகரில் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி பொறியாளராக சந்திரசேகர் (52) பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திருப்பூர் மங்கலம் ரோடு பெரியாண்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனிவேல் மாநகராட்சியில் குடிநீர் குழாய் பதிக்கும் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை ஒப்பந்த முறையில் செய்து வருகிறார். இவரிடம் திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல உதவி பொறியாளர் சந்திரசேகர் பில் தொகை கொடுக்கும் எம்- புக்கில் கையெழுத்திட ரூ 25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் பழனிவேல் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உதவி பொறியாளர் சந்திரசேகரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் 25 ஆயிரம் பணத்தை ஒப்பந்ததாரர் பழனிவேலிடம் கொடுத்து பொறியாளர் சந்திரசேகரிடம் கொடுக்க சொன்னதின் பேரில் குமார் நகர் நீர்த்தேக்க தொட்டி அருகே இருந்த உதவி பொறியாளர் சந்திரசேகரிடம் ஒப்பந்ததாரர் பழனிவேல் ரூ 25 ஆயிரம் பணத்தை கொடுத்த போது அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சசிரேகா உள்ளிட்ட போலீசார் பாய்ந்து வந்து உதவி பொறியாளர் சந்திரசேகரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த லஞ்ச ஒழிப்பு துறையினரின் நடவடிக்கை திருப்பூர் மாநகராட்சியில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளிடையே கதி கலங்க செய்துள்ளது. அடுத்து எந்த மண்டலத்தில் யார் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்குவார்கள்.
No comments:
Post a Comment