திருப்பூரில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை !
திருப்பூர் விஜயாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, பொதுப் பணித் துறையின் சார்பில் 8 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் எம் எல் ஏ , வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் , தொமுச மாநில துணைச் செயலாளரும், தெற்கு மாநகர செயலாளருமான டி கே டி மு.நாகராசன் , மண்டல தலைவர் கோவிந்தசாமி , பகுதி திமுக செயலாளர் மேங்கோ பழனிச்சாமி 47 வது வட்டக் கழக செயலாளர் வெங்கட்ராஜ் , மாமன்ற உறுப்பினர் ஜெயசுதா பூபதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் .
No comments:
Post a Comment