தாராபுரத்தில் திடீர் வெடிச்சத்தம் பொதுமக்கள் பீதி. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 October 2023

தாராபுரத்தில் திடீர் வெடிச்சத்தம் பொதுமக்கள் பீதி.

 


தாராபுரத்தில் திடீர் வெடிச்சத்தம் பொதுமக்கள் பீதி. 


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திடீரென காலை 11 மணி 50 நிமிடத்தில் ஊரையே அதிரும் அதிபயங்கர வெடிச்சத்தம் கேட்டது இந்த சத்தமானது சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த வெடிச்சத்தத்தை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தபோது வானில் புகை மண்டலமாக காணப்பட்டது என தெரிவிக்கின்றனர்.



மேலும் ஒரு முறை ஏற்பட்ட மிக பயங்கரமான வெடிச்சத்ததால் வானில் விண்கற்கள் ஒன்றை ஒன்று மோதி கொண்டதால் ஏற்பட்ட சத்தமா அல்லது நில அதிர்வு காரணமா என ஒருவருக்கொருவர் செல்போன் மூலம் ஒருவருக்கொருவர் விசாரித்து வருகின்றனர் அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் சத்தம் குறித்த பதிவுகள் வைரலாக பரவி வருகின்றன.இது குறித்து தாராபுரம் காவல் துறையும் வருவாய்த்துறையும் இதுவரை முறையான விளக்கம் அளிக்கவில்லை தாராபுரம் நேதாஜி தெரு சின்ன கடை வீதி ஆகிய குடியிருப்பு பகுதியில் இருந்து பொதுமக்கள் வீட்டை விட்டுஅலறி அடித்தபடி வெளியே அதிர்ச்சியுடன் வானத்தையே பார்த்தனர் இதனால் தாராபுரம் மூலனூர் குண்டடம் இதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட நகர் மற்றும் கிராம பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad