தாராபுரத்தில், அதிமுக ஓ.பி.எஸ் அணி கழக செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், அதிமுக ஓ.பி.எஸ் அணி சார்பில்,கழக செயல்வீரர்கள் கூட்டம், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி. காமராஜ் தலைமையில், நகர செயலாளர் ஜவகர் முன்னிலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு செயல் படவேண்டும் என்பது குறித்தும், ஜனவரி 6ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து உறுப்பினர்களும் கழந்து கொள்வது குறித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் மருது அழகுராஜ்கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.இதில் தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட கழக துணைச் செயலாளர் வெ.தண்டபாணி ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார் மனோகர், சக்திவேல், ஜெயசீலன். பாண்டியன், ராணி. சற்குணம், ராஜேஸ்வரன், வெங்கடபதி. நாராயணசாமி, மாவட்ட பேரவை செயலாளர் தளி மாரிமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வாத்தியார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அம்மன்பாலு, நகர துணை செயலாளர் பூபதி,, அவை தலைவர் பாண்டு, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஜாபர்சாதிக்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சைய்த்இப்ராஹீம்,நகர பொருளாளர் நகேஸ்வரன்,Fast news ராஜப்பா, பேரூர் கழக செயலாளர் சீரை செல்வம், இலக்கிய அணி செயலாளர் தண்டபாணி, மாவட்ட மாணவரணி செயலாளர் சுஜித் குமார்,நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ்,நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில், வார்டு செயலாளர் கத்திசுரேஷ், கோட்டைகுமார். டாஸ்மார்க் துரை. மணிகண்டன். காளிமுத்து. முருகேசன், சித்திக்,நகர சிறுபான்மைபிரிவு செயலாளர் பாவா மைதீன்,நகர சிறுபான்மை பிரிவு துணை தலைவர் முகமது அலி ஜின்னா, ஜிவா செல்வம்,
மாவட்டபிரதிநிதி கவிதா, ஜாகிர் உசேன், தாஜ் நிஷா, மாவட்ட இளைஞர்அணி தலைவர் ஜமால்,அலங்கியம் சரவணன்,,நகர,வார்டு மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment