பயங்கர தீ விபத்தில் பயணிகளுடன் வந்த அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடானது !
திருப்பூர் அடுத்துள்ள கருமத்தம்பட்டியில் எலச்சிபாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென முன் பகுதியில் இருந்து புகை வந்ததின் காரணமாக ஓட்டுநர் பாலத்தின் ஓரத்தில் பேருந்து நிறுத்தி பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டார் பயணிகள் தங்களுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி சிறிது தூரத்தில் சென்று பாதுகாப்பாக நின்று கொண்டனர் அதற்குள் பேருந்தில் தீ மலமலவென பற்றியதால் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது இதை அணைக்க அந்த பகுதியில் எந்த ஒரு வசதியும் இல்லாத காரணத்தால் தீயை ஆரம்பத்திலேயே அணைக்க முடியவில்லை.
சூலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர் அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து சாம்பலானது பேருந்து ஓட்டுநர் பேருந்தில் புகை வந்தவுடன் உடனடியாக பயணிகளை இறக்கி விட்டதன் காரணமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்துகளில் தீயணைப்பான் கருவிகள் இருந்தால் புகை வந்த போது அதை அனைத்து கட்டுப்படுத்தி இருக்கலாம் என்றும் இனிமேலாவது தீ அணைப்பான் கருவிகளை அனைத்து பேருந்துகளிலும் பொருத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment