சாமளாபுரம் பேரூராட்சி குளத்துக்கரை பகுதியில் பெரிய மலை தேனிகள் பொதுமக்களை கொட்டியது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 October 2023

சாமளாபுரம் பேரூராட்சி குளத்துக்கரை பகுதியில் பெரிய மலை தேனிகள் பொதுமக்களை கொட்டியது.

 


சாமளாபுரம் பேரூராட்சி குளத்துக்கரை பகுதியில் பெரிய மலை தேனிகள் பொதுமக்களை கொட்டியது. 



திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சியில் தாராபுரம் ரோட்டில் உள்ள குளத்துக்கரை பகுதியில்   பெரிய அளவில் உள்ள மலைத் தேனிகள் 2 நபர்களை கொட்டியது மேலும் அந்தப் பகுதியில் பரவலாக மலை தேனி சுற்றி திரிந்ததால் பேரூராட்சி தலைவர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி உடனடியாக  அவர்களுக்கு முதலுதவி

செய்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அங்கு அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது . அதன் பிறகு சாமளாபுரம் குளத்துக்கரை பகுதிக்கு  பொதுமக்களை அழைத்துக் கொண்டு சென்று மலை தேனி எங்கே இருந்து வருகிறது என்று தேடிய பொழுது ஒரு தோப்பில் தென்னை மரத்திற்கு மேல் பெரிய அளவில் கூடுகட்டி உள்ளது  கண்டுபிடித்தனர் . மேலும் இந்த மலை தேனியை அகற்ற தீயணைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக  கூறினர். இந்த மலை தேனியை அகற்றும் வரை இந்த பகுதியில்  பொதுமக்கள் நடமாடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்றும் இந்த ஆபத்தான மலை தேனிக்களை  அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கையை சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி  எடுத்து வருகிறார் . 



மாவட்ட செய்தியாளர்

அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad