திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் வயதான பெண் அவமதிப்பு ! ஆவின் பால் (டீ கடை) க்கு சீல் ! மாநகராட்சி அதிரடி நடவடிக்கை !
திருப்பூர் மாநகராட்சி கலைஞர் கருணாநிதி பஸ் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆவின் பாலகம் டீக்கடை முன்பு அமர்ந்திருந்த பெண்மணியிடம் ஆவின் கடை உரிமையாளர் டீ மாஸ்டர் ஆகியோர் இங்கே அமரக்கூடாது என்று தண்ணீர் ஊற்றி துரத்தியது இல்லாமல் மரியாதை குறைவான வார்த்தைகளை பேசி அங்கு இருந்து எழுந்து செல்லுமாறு சத்தம் போட்டார்கள் மேலும் ஆவின் கடை முன்புள்ள நடைபாதையில் இருந்த பூ விற்கும் பெண் சுடுதண்ணீர் பிடித்து ஊற்றுங்கள் என்று சத்தமிட்டார். இவைற்றை எல்லாம் வீடியோ எடுத்த பொதுமக்கள் இணையதளத்தில் பதிவிட்டும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து ஊடகங்களில் செய்தியாக பரவியது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி உடனடியாக ஆவின் பால் கடையை சீல் வைத்தனர் மேலும் அனைத்து கடைகளின் முன்புறம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பொருட்களை மாநகராட்சி லாரிமூலம் ஏற்றி சென்றனர்.
No comments:
Post a Comment