திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி பொறுப்பாளர் நியமனம் .
மாண்புமிகு தமிழக முதல்வரும், திமுக தலைவருமாகிய மு க ஸ்டாலின் அவர்கள் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி பொறுப்பாளராக திருப்பூர் 14 வது வட்ட திமுக செயலாளர் மு.ரத்தினசாமி அவர்களை நியமித்துள்ளார். இந்த பொறுப்பிற்கு பரிந்துரை செய்த தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட செயலாளருமான க . செல்வராஜ் எம் எல் ஏ , அவர்களுக்கும் தொமுச மாநில துணைச் செயலாளரும், தெற்கு மாநகரச் செயலாளருமான டி கே டி மு. நாகராசன், வடக்கு மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநில மகளிர் பிரச்சார குழு பொறுப்பாளர் உமா மகேஸ்வரி , நல்லூர் பகுதி கழகச் செயலாளர் மேங்கோ பழனிச்சாமி , திருப்பூர் மாவட்ட திமுக திலகராஜ் , ஆகியோருக்கு கழக உடன்பிறப்புகளுடன் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றார். இந்த நிகழ்வில் மாவட்ட பாத்திர தொழிற்சங்க செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் மணிமாறன் , மற்றும் மகளிர் அணி கௌரி, புஷ்பவதி , வட்ட கழகச் செயலாளர்கள் மகேந்திரன் , சண்முகம், குட்டி குமார், செந்தில்குமார், ஐயம்பெருமாள், கழக அணி பொறுப்பாளர்கள்: கஜேந்திரன், பிரகதீஸ்வரன், பத்மநாபன், தங்கப்பன், திலீப் மற்றும் 14 வது வட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment