தொகுப்பு வீடுகளை பராமரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்
ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவரும், திமுக மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர்
கே. ஈஸ்வர சாமி மற்றும் மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் உயர்திரு. இல. பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் உயர்திரு. இரா. ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர்களின் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவராஜ் மற்றும் திட்ட இயக்குனர் லட்சுமணன் ஆகியோர்களை நேரில் பார்த்து மைவாடி ஊராட்சிகளில் தொகுப்பு வீடுகள் பராமரிப்பு செய்யக்கோரியும், கொழுமம் கிராமத்தில் சாவடி அமைக்க கோரிக்கை வைத்தனர.இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் K. ஐயப்பன், மைவாடி ஊராட்சி மன்றத் தலைவர் K. முருகன், செயலர் முகமது இஷாக் உட்பட மைவாடி ஊராட்சி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மடத்துக்குளம் செய்திகளுக்காக
-அழகு திருநாவுக்கரசு
No comments:
Post a Comment