அப்பாவி பாலஸ்தீன குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேல் நாட்டை கண்டித்து எஸ்டிபிஐ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 October 2023

அப்பாவி பாலஸ்தீன குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேல் நாட்டை கண்டித்து எஸ்டிபிஐ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !


 அப்பாவி  பாலஸ்தீன குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேல் நாட்டை கண்டித்து எஸ்டிபிஐ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! 



பாலஸ்தீனிய நாட்டுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் நடந்து வரும் போரில் பாலஸ்தீனிய அப்பாவி குழந்தைகளை கொன்று குவித்தும் நோயாளிகள் இருக்கும் மருத்துவமனைகளை தரைமட்டமாக்கியும், ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் நாட்டு பிரதமரான நெதன்யாவை சர்வதேச குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கோரியும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி திருப்பூரில் வடக்கு எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக எஸ்ஏபி பள்ளிவாசல் முன்புறம் மற்றும் பல்வேறு பள்ளிவாசல்களின் முன்புறமும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் பாபு பாய், துணைத் தலைவர் பாஷாமைதீன்,நவீத், ஷாஜகான் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இஸ்ரேல் அரசையும் இஸ்ரேல் நாட்டு பிரதமரையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். 



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad