மக்களின் நலனில் அக்கறை காட்டும் மாவட்ட ஆட்சியர் ! அலட்சியத்தில் சில அதிகாரிகள் !! திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது இங்கு தனி நபர் பிரச்சனை முதல் பொது பிரச்சனைகளுக்காக பொதுமக்கள் ஏராளமான பேர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை தீர்க்க மனு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் இருதயராஜ் இஆப அவர்கள் கூட்ட அரங்கிற்கு வரும் வழியில் சிறுவனுடன் மனுவோடு நின்ற பெண்ணிடம் மனுவை வாங்கி படித்துவிட்டு உள்ளே வருமாறு கூறிவிட்டு உள்ளே சென்றார். கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அதிகாரிகள் அமரும் இருக்கையில் 10 இருக்கைகளுக்கு மேல் காலியாக இருந்தது. இருக்கைகளில் அமர்ந்திருந்த அதிகாரிகளில் சிலர் ஏதோ கடமைக்கு வந்தது போல் தங்கள் செல்போன்களை குனிந்து பார்த்தவாறு இருந்தனர். இதைக் கண்ட பொதுமக்கள் முகம் சுழித்து செல்லும் காட்சியை காண முடிந்தது . அடுத்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் மேலும் கூட்டத்தில் செல்போன் பார்ப்பதை விட்டு தங்கள் பணியில் அக்கரையுடன் ஈடுபடவேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு ஆகும்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment