திருப்பூரில் நீட்தேர்வுக்கு எதிராக திமுகவினர் கையெழுத்து வேட்டை !
நீட் விலக்கு நம் இலக்கு என்ற இலக்கை நோக்கி பொது மக்களிடம் கையெழுத்து வாங்கி ஜனாதிபதிக்கு அனுப்பும் திட்டத்தை திமுக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் எம் எல் ஏ, அவர்களின் வழிகாட்டுதல் படி தொமுச மாநில துணைச் செயலாளரும், தெற்கு மாநகர செயலாளருமாகிய டி கே டி .மு. நாகராசன் அவர்கள் முன்னிலையில்
நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி,மருத்துவர் அணி, மற்றும் மாணவரணியினர் இணைந்து திருப்பூர் வடக்கு மாவட்டம், திருப்பூர் தெற்கு மாநகரக் கழகத்திற்கு உட்பட்ட 52 வது வட்டக் கழகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் காலை நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடமும் கையெழுத்து பெற்றார்கள்.
No comments:
Post a Comment