நீட் தேர்விற்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் திமுக தொடங்கியது . தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர், திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்களின் வழி காட்டுதல் பேரில்
திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்விற்கு எதிராக மேதகு குடியரசு தலைவரின் கவனம் பெறும் வகையில் 50 நாட்களில் 50 இலட்சம் கையெழுத்துக்களை பெறும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை மாண்புமிகு அமைச்சர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்ததை தொடர்ந்து
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், திருப்பூர் இராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் மாநில அயலக அணி செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா M.P., மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ ஆகியோர் இம்மாபெரும் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் தொமுச மாநில துணைச் செயலாளரும், தெற்கு மாநகர செயலாளருமாகிய டி கே டி மு நாகராசன், வடக்கு மாநகர செயலாளரும் மரியாதைக்குரிய மேயர்என்.தினேஷ்குமார் மற்றும் பகுதி, வட்ட திமுக செயலாளர்களும், நிர்வாகிகளும் மண்டல தலைவர்கள் ,மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் .
No comments:
Post a Comment