திருப்பூர் 10 வது வார்டில் தூய்மை பணியாளர்களுக்கும், திமுகவினருக்கும் தீபாவளி பரிசுகள் வழங்கினார்
கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டுக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், கொசு மருந்து அடிப்பவர்கள், தண்ணீர் சப்ளையர்கள், பிளம்பர்கள், மேஸ்திரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு 10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் ஆண்களுக்கு பேண்ட் - சர்ட், பெண்களுக்கு புடவைகள் மற்றும் பெரிய அளவிலான பட்டாசு கிப்ட் பாக்ஸ், இனிப்பு வகைகள் தீபாவளி பரிசாக வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் திமுக நிர்வாகிகளுடனும், தூய்மை பணியாளர்களுடனும் சேர்ந்து பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் பரிசுகளை பெற்றுக்கொண்ட திமுக நிர்வாகிகளும் மற்றும் தூய்மை பணியாளர்கள் பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் நன்றி கூறி தீபாவளி நல் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment