திருப்பூர் மாநகராட்சியில் குன்றும் குழியுமான சாலைகள்சரி செய்திட சமூகஆர்வலர் ஆம்ஆத்மி நிர்வாகி கோரிக்கை!
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரோடுகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்க முடியாத நிலைமை உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி திருப்பூர் மாவட்ட பொறுப்பாளரும், சமூக ஆர்வலருமான சுந்தரபாண்டியன் எஸ் பி அவர்கள் மாநகராட்சிக்கு விடுத்துள்ள கோரிக்கையில் திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி வேலை நடைபெறுகிறது பல இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பு பணி , பாதாள சாக்கடை , அமைக்கும் பணி என காண்ட்ராக்டர் ஆட்கள் குழி தோண்டி ரோடுகளில் தாறுமாறாக போட்டுவிட்டு போய் விடுகின்றனர் மழைக்காலங்களில் பொதுமக்கள் வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக செல்லவில்லை என்றால் காண்டாக்டர்கள் வெட்டி வைத்த குழி நமக்கு வெட்டியதாக மாறிவிடுகிறது. காண்டாக்ட் காரர்கள் பலர் பொறுப்பில்லாமல் ஏனோ தானோ என்று வேலை செய்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடுப்பு எலும்பு கழண்டு விடும் போலிருக்கின்றது பெரும்பாலான வாகன ஓட்டிகள் தோள்பட்டை வலியில் தவிக்கின்றனர். இந்த பாதைகளில் அரசு அதிகாரிகளும் பயணிக்கின்றனர், அரசியல்வாதிகளும் இந்த வழியாகத்தான் பயணிக்கின்றனர், இதையெல்லாம் பார்த்தும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment