திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டில் சாக்கடை தூர் வாரும் பணிகள் தீவிர படுத்தினார் கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 November 2023

திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டில் சாக்கடை தூர் வாரும் பணிகள் தீவிர படுத்தினார் கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு


திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டில் சாக்கடை தூர் வாரும் பணிகள் தீவிர படுத்தினார் கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு



திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் பத்தாவது வார்டில் பல வருடங்களாக  சாக்கடை வடிகால் கால்வாய்கள் முற்றிலும் தூர்வாரப்படாத நிலையில் இரண்டு அடி ஆழத்திற்கு சாக்கடை மண்கள் நிறைந்து இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீருடன் சாக்கடை நீர்  வீடுகளுக்கு முன்பு சூழ்ந்து விடுவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர் இதனால் பல்வேறு நோய் தொற்றுகளும் உருவாகும் நிலை இருந்தது .  மழைக்காலத்திற்கு முன்பாக இந்த சாக்கடைகளை முற்றிலும் தூர்வார திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டு கவுன்சிலர் பிரேமலதா கோட்டாபாலு அவர்களின் பெரும் முயற்சியில் அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோயில் வீதி காமராஜர் காலனி உள்பகுதியில் இருந்து மாரியம்மன் கோவில் வரை 10 வது வார்டு பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் கால்வாய்கள் தரைமட்டம் வரை தூர்வாரப்பட்டது . இந்தப் பணிகளை திருவண்ணாமலையை சேர்ந்த ஊழியர்களை கொண்டு சாக்கடைகளை தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் நடைபெறும் போது பத்தாவது வார்டு கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் உடனிருந்து பணிகளை பார்வையிட்டார். 



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad