தமிழ்நாடு அரசின் இலவச மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம் ! திருப்பூர் கோவை பாத்திர தொழிற்சங்க நிர்வாகியும் 14வது வார்டு திமுக செயலாளருமான மு. ரத்தினசாமி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்த ஆயுஷ்மான் பாரத் எனும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டொன்றுக்கு ரூ . 5 லட்சம் வரை கட்டணம் இல்லாமல் தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெற அரசால் இன்சூரன்ஸ் வழங்கப்படுகின்றது திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் அனுப்பர்பாளையம் மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம் (27/11/23) திங்கள், (28/11/23) செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதால் எனவே பொது மக்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குடும்ப அட்டை, ஆதார் கார்டு, ஆதார் கார்டில் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர் கொண்டு சென்று பதிவு செய்து மருத்துவ இன்சூரன்ஸ் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment