திருப்பூரில் பேனா சிலையுடன் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் அவரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் அவர் பயன்படுத்திய பேனா உருவத்தை பிரம்மாண்டமான சிலையாக வாகனத்தில் பொருத்தியும், கலைஞரின் சாதனை தொகுப்புகள் அடங்கிய புகைப்படங்கள், அவரின் திருவுருவச் சிலை அடக்கிய முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி திருப்பூருக்கு வருகை தந்த வகையில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கா. செல்வராஜ் எம்எல்ஏ தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு நாகராசன், வடக்கு மாநகர செயலாளர், மாண்புமிகு மேயர் என் தினேஷ் குமார் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், மற்றும் திருப்பூர் 14 ஆவது வட்ட கழக செயலாளர் மு ரத்தினசாமி அவர்கள் தலைமையில் பகுதி, மாநகர, அணி, பாத்திர தொழிற்சங்க நிர்வாகிகள், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பாக வரவேற்பளித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment