சூப்பர் ரோடு கண்டு கொள்ளாத சூப்பர் அதிகாரிகள்!
திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் 10வது வார்டு மாரியம்மன் கோவில் பிரதான சாலை கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இந்த மாதிரி பெரும் கற்கள் கொண்ட ரோடாக உள்ளது. பெரும் கற்களை நிரப்பியுள்ளது தனியார் நிறுவனங்கள். ஸ்மார்ட் சிட்டியான திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ரோட்டில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிக்கு குடிநீர் பணிக்கும் தோண்டப்பட்ட குழிகளில் பெரிய பெரிய கற்களை போட்டு இதுபோன்று மூடிவிட்டு செல்லும் தனியார் ஒப்பந்ததாரர்களை ஊசி முனை அளவு கூட திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டல அதிகாரிகள் கண்டிப்பதில்லை, சரி செய்வது இல்லை இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மாரியம்மன் கோவில் வயதான பக்தர்கள் இந்த கற்கள் மேல் நடக்க முடியாமல் கீழே விழும் நிலை உள்ளது பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அந்த பகுதி வயதான பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜா மைதீன்
No comments:
Post a Comment