பழங்கரை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்றம், மற்றும் சமூகசேவை அமைப்பு சார்பில் தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றியம் ,பழங்கரை ஊராட்சியில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள், வாட்டர் மேன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள், மொத்தம் 70 நபர்களுக்கு இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.
பழங்கரை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களாக உள்ள ஆண்கள், பெண்களுக்கு பழங்கரை ஊராட்சி விஸ்வ பாரதி பார்க் அசோசியேசன் தலைவர் சரீப்பாய் 31 ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் வேஷ்டி சர்ட் ,சேலை வழங்கினார் . மேலும்
பழங்கரை ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், டிரைவர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மொத்தம் எழுவது நபர்களுக்கு தீபாவளி யை முன்னிட்டு இனிப்பு, காரம் பழங்கரை ஊராட்சியின் மூலம்தலைவர் திருமதி.பி.கோமதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பழங்கரை ஊராட்சி மன்ற தலைவர்
திருமதி.பி .கோமதி, துணைத் தலைவர் நடராஜன் , முன்னாள் தலைவர் எஸ் .கே. செந்தில்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்.சண்முகம், சரஸ்வதி ஜெகநாதன் ,ரங்கசாமி, ஜோதிமணிகணேசன், மேகலா சண்முகம் ,கௌரீஸ்வரி, பாண்டித்துரை, பழங்கரை முன்னாள் உறுப்பினர் வி கோபால், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்..
No comments:
Post a Comment