திருப்பூர் நான்காவது வார்டு கவுன்சிலர் மக்களுடன் இணைந்து நமக்கு நாமே திட்டத்திற்கு மேயரிடம் நிதி அளித்தார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெரும் கட்டமைப்பு பணிகளுக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் கவுன்சிலர்கள் நிதி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் நான்காவது வார்டு விக்னேஸ்வரா நகர் பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு பணியின் மொத்த மதிப்பீடு தொகையான ரூ 7-லட்சத்து 75 ஆயிரம், இதில் இரண்டில் ஒரு பங்கு தொகையான ரூ 3 லட்சத்து 87 ஆயிரத்தை பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக மாண்புமிகு மேயர் ந. தினேஷ்குமார் அவர்களிடம் நாலாவது மாமன்ற உறுப்பினர் முத்துசாமி நாலாவது வார்டு பொதுமக்களுடன் இணைந்து வழங்கினார். நிதியினை பெற்று கொண்ட மேயர் ந.தினேஷ் குமார் தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி சார்பாகவும் தனது சார்பாகவும் நன்கொடையாளர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment