கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் என். சங்கரய்யா நினைவேந்தல் கூட்டம்
விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், 102 வயது நிறைந்தவருமான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா இயற்கை எய்தினார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, அனுப்பர்பாளையம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன்பு, மார்க்சிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் ச.நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது.
திமுக பகுதிக் கழகச் செயலாளர் கொ.ராமதாஸ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், சிபிஐ மண்டல செயலாளர் எஸ்.செல்வராஜ், அதிமுக பகுதிக் கழகச் செயலாளர் சுப்பிரமணி, தபெதிக மாநகரத் தலைவர் சண். முத்துக்குமார், திவிக மாவட்டச் செயலாளர் முகில் ராசு, கொமதேக சார்பில் வி.சி.மணி ஆகியோர் மறைந்த தலைவருக்குப் புகழஞ்சலி செலுத்தினர். பின்னர் தோழர் என். சங்கரய்யா உருவப் படத்துக்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. நிறைவாக, விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சி நகரக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், தோழர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment