மலேசியாவில் சிக்கி தவிக்கும் பெண்ணை காப்பாற்ற கலெக்டரிடம் நிதி கொடுத்த இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் !
திருப்பூர் தெற்கு வட்டம் ஆண்டிபாளையம் குளத்து புதூர் பிள்ளையார் கோவில் வீதி கதவு எண் 1/60 பி என்ற முகவரியில் வசித்து வரும் மாற்று திறனாளியான சரவணன் என்பவர் மலேசியா நாட்டில் சிக்கித் தவிக்கும் தனது மனைவி தனலட்சுமி என்பவரை தமிழ்நாட்டிற்கு மீட்டு வர திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் உதவி கோரியிருந்தார்.இந்த செய்தி அறிந்து மலேசியா நாட்டிலிருந்து தனலட்சுமியை மீட்க இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இஆப அவர்கள் மூலம் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் வழங்கினார்கள். உதவி கோரிய மாற்றுத்திறனாளி சரவணன் உடனிடருந்தார்.
No comments:
Post a Comment