திருப்பூர் சாலையோர வியாபாரிகளின் மேம்பாட்டிற்கு மேயர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையில், vending கமிட்டி அமைக்கப்பட்டு, சாலையோர வியாபாரிகளுக்கென இடங்களை கண்டறிந்து அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாண்புமிகு மேயர் ந. தினேஷ் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த பல் வேறு திட்டங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர், காவல்துறையினர், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment