திமுக இளைஞரணி புல்லட் பேரணிக்கு திருப்பூரில் பெரும் வரவேற்பு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 November 2023

திமுக இளைஞரணி புல்லட் பேரணிக்கு திருப்பூரில் பெரும் வரவேற்பு


திமுக இளைஞரணி புல்லட் பேரணிக்கு திருப்பூரில் பெரும் வரவேற்பு  மாநில உரிமை மீட்புக்கான திமுக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட (டி எம் கே ரைடர்ஸ்) வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  துவக்கி வைத்தார்.


13 நாட்கள் - 234 தொகுதிகள் - 504 பிரச்சார மையங்கள் - 8,647 கிலோமீட்டர் பயணித்து லட்சக்கணக்கான இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இரு சக்கர வாகனப் பேரணியை,  திருப்பூர் வடக்கு மாவட்டம் வடக்கு மாநகரம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மற்றும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ ஆகியோர் வழிகாட்டுதல் படி தொமுச மாநில துணைச் செயலாளரும், தெற்கு மாநகர செயலாளருமாகிய டி கே டி மு நாகராசன், மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் , மற்றும் திமுக நிர்வாகிகள் வரவேற்று, புதிய பேருந்து நிலையம் முதல் விஜயாபுரம் வரை பேரணியில் கலந்து கொண்டு மாநில உரிமை மீட்புக்கான திமுக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாட்டின் நோக்கத்தை பரப்புரை செய்தார்கள்.



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad