திருவண்ணாமலையில் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த தமிழக அரசை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் ! திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கை பதிவு செய்து விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த தமிழ்நாடு அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகை ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் திருவண்ணாமலையில் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் குண்டடம் ராஜு தலைமை வகித்தார். விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் முத்து விஸ்வநாதன் , கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொருளாளர் சண்முகசுந்தரம், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் , விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அவிநாசி ஒன்றிய தலைவர் வேலுச்சாமி , திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் ரவி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment