திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் இருசக்கர வாகன பரப்புரை பேரணி திருப்பூர் வருகை !
மாநில உரிமை மீட்புக்காகவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் திமுக இளைஞரணி சார்பாக வும் இரண்டாவது மாநில மாநாடு நடை பெறுவதையொட்டியும் தமிழகம் எங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த இருசக்கர வாகனங்கள் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த வகையில் திருப்பூருக்கு இந்த வாகனங்கள் வருவதை ஒட்டி தொமுச மாநில துணைச் செயலாளர் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் திமுகஇளைஞர் அணி 2 வது மாநில மாநாடு விளக்கியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை குமரி முனையில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்கள். அதைத்தொடர்ந்து 18-11-2023 காலை 10 மணியளவில் திருப்பூர் தெற்கு மாநகரத்துக்கு உட்பட்ட திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி காங்கேயம் ரோடு CTC கார்னர் அருகில் வருகை தரும் இரு சக்கர வாகன வீரர்களை திமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் சென்று வடக்கு மாவட்ட கழக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்களின் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது ஆகையால் மாநில,மாவட்ட, மாநகர, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொ.மு.ச பேரவை நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் கழக உடன்பிறப்புகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திருப்பூர் தெற்கு மாநகர திமுக சார்பாக கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment