திருப்பூருக்கு பேனா சிலையுடன் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி வருகை !
தொமுச மாநில துணைச் செயலாளரும் , திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளருமான டி. கே. டி. மு. நாகராசன் தனது அறிக்கையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கலைஞரின் சாதனை தொகுப்புகள் அடங்கிய புகைப்படங்கள்,பேனா சிலை அடங்கிய முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி நாளை 22-11-2023 ம் தேதி டாக்டர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் வளாகத்தில் காலை 10 மணி அளவில் வந்தடைகிறது. வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் தலைமையில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது ஆகையால் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்டக் கழக அனைத்து நிர்வாகிகளும், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொ.மு.ச பேரவை நிர்வாகிகள், இந்நாள், முன்னாள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் திமுகவினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென திருப்பூர் தெற்கு மாநகர திமுக சார்பாக கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment