பாலின ரீதியான பாகுபாடு மற்றும் வன்முறை பற்றிய குறும்பட விழிப்புணர்வு சேவ் சமூகசேவை அமைப்பு நடத்தியது ! சேவ் சமூக அமைப்பின் மூலமாக திருப்பூர் மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் பாலின ரீதியிலான பாகுபாடு மற்றும் வன்முறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அனுப்பர்பாளையம், காயத்ரி நகர் பகுதியில் பாலின சமத்துவம் , குழந்தை திருமணம் மற்றும் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற கருப்பொருட்களில் விழிப்புணர்வு குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
அதனை அந்தப் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் மற்றும் வளரிளம் சிறுவர் சிறுமிகள் பார்த்து பயன் அடைந்தனர்.
இந்த நிகழ்வினை சேவ் அமைப்பின் ஆத்துப்பாளையம் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தி மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்
No comments:
Post a Comment