திருப்பூரில் பயங்கரம் பெண்ணுக்கு கத்தி குத்து !
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் பேருந்துக்காக கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த ஒரு நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து அந்த பெண்ணின் தலைப்பகுதியில் சரமாரியாக குத்தினார் இதில் நிலை குலைந்து போன அந்த பெண்மணி ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்தார் உடனடியாக பயணிகள் மற்றும் ஒரு காவலர் பொதுமக்களுடன் சேர்ந்து உடனடியாக அந்த பெண்ணை மீட்டு ஆட்டோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கத்தியால் குத்திய நபரை பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் மடக்கி பிடித்தனர் அவரிடம் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்தது அந்த பெண் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் அந்த பெண்ணை கணேசன் ஏன் கத்தியால் குத்தினார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கத்தி குத்து சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment