இன்று முதல் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்!
திருப்பூர் கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் 20 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம் என அறிவித்தனர் புதிய ஜவுளிக் கொள்கை மற்றும் மின்சார மானியம் ரத்து போன்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ஜவுளி உற்பத்தி தொழில் மந்த நிலையில் உள்ளதாகவும் கடந்த ஆறு மாதங்களாக ஜவுளி உற்பத்தி தொழில் வீழ்ச்சி அடைந்த நிலையில் இந்த தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளதாக இருக்கும் நிலையில் மேலும் இந்த தொழிலுக்கு போட்டியாக வங்காளதேசம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து மிகவும் மலிவான விலையில் துணிகள் இறக்குமதி செய்யப்படுவதாலும் உள்நாட்டு ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்றும் பரவலாக பாடியெஸ்ட்டர் துணிகள் உபயோகம் அதிகரிப்பதால் உள்ளூரில் பருத்தியினால் தயாராகும் துணிகள் உபயோகம் குறைந்துள்ளதாகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது மத்திய , மாநில அரசுகள் உள்ளூர் ஜவுளி தொழில்கள் தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற உதவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று முதல் 20 நாட்களுக்கு ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவித்துள்ளது அரசு கை கொடுக்க வேண்டும் பருத்தி ஜவுளி தொழிலை காப்பாற்ற வேண்டும் என்பதே திருப்பூர் , கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையாக உள்ளது .
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் .
No comments:
Post a Comment