பேருந்து நிறுத்தும் அருகில் பள்ளம் தட்டு தடுமாறிய முதியவர் சரி செய்த இளைஞர்கள்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் துங்காவி கிராமத்தில் முக்கிய இடமான பேருந்து நிலையம் அருகாமையில் துங்காவி to பூளவாடி செல்லும் சாலை ஓரத்தில் பல நாட்களாக இரண்டடிக்கு மேல் குழியாக இருந்தது இந்த இடத்தில் முதியவர்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் பேருந்துக்காக நிற்கும் போதும் அருகாமையில் உள்ள கடைகளுக்கு செல்லும் போதும் சிரமப்பட்டு வந்தார்கள் இது சம்பந்தமாக துறை சார்ந்த அலுவலர்களிடம் பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திடீரென்று பெய்த மழையினால் மேலும் பள்ளமான நிலையில் முதியவர் ஒருவர் அவ்வழியாக மிகுந்த சிரமப்பட்டு சென்றதால் இதை பார்த்துக் கொண்டிருந்த துங்காவி இளைஞர்கள் உடனே அவ்விடத்தினை அவர்களால் முடிந்த அளவு சரி செய்துள்ளார்கள் மீண்டும் அவ்விடம் பள்ளமாக வாய்ப்புள்ளது. துறை சார்ந்த அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று துங்காவி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கேட்டுக் கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment