திருப்பூர் மாநகராட்சி 10 வது வார்டில் புதிய மின் விளக்குகள் கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு நடவடிக்கை!
திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டுக்குட்பட்ட ஓம் விநாயகா கார்டனில் ஆறு வீதிகளுக்கும் ஒன்பது தெரு விளக்குகள் புதிதாக போடப்பட்டது மற்றும் ஆத்துபாளையத்தில் இருந்து ஏவிபி ஸ்கூல் செல்லும் வழியில் நான்கு புது மின் விளக்குகள் மற்றும் பூண்டி ரிங் ரோட்டிலும் மூன்று புது மின் விளக்குகள் போடப்பட்டது மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலிலும், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ, வடக்கு மாநகர திமுக செயலாளரும், மாண்புமிகு மாநகராட்சி மேயர் என் தினேஷ் குமார், ஒண்ணாவது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் ஆகியோர் ஒத்துழைப்புடன் பத்தாவது வார்டு பகுதிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டாபாலு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய மின் விளக்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்களுக்கு பத்தாவது வார்டு பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment