திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் குறித்து மேயர் தலைமையில் ஆலோசனை !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் மக்களின் நீண்டகால கோரிக்கையான,தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் கோவில் வழி பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை விரைவில் முடிக்கும் வண்ணமாக, பேருந்துகளை மாற்று இடத்தில் நிறுத்தி பணிகளை வேகப்படுத்துவது குறித்து மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இஆப, மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment